விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு வரவேற்கத்தக்கது- இஸ்ரோ தலைவர்.!
விண்வெளித் துறையில் தனியார்மயத்தின் பங்களிப்பு குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் இன்று விளக்கம் அளித்தார். அதில், விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என கூறினார்.
விண்வெளித் துறையில் நாடு எதிர்நோக்கும் சீர்திருத்தத்தை அடைய தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதும், பல முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவை நிலைநிறுத்தும் என கூறினார்.
இது விண்வெளி முயற்சிகளில் தனியார் துறையை கையாளுவதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு தேசிய நிறுவனமாக செயல்படும். இதற்காக இஸ்ரோ அதன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், வசதிகளையும் பகிர்ந்து கொள்ளும் என கூறினார்.