தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினால் எச்சரிக்கும் கருவி!

தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினால் எச்சரிக்கும் கருவி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியே வரும் போது முக கவசம் அணிய வேண்டும் என்றும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு வந்து செல்வோர், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை கண்காணிக்க பிரத்யேக கருவி பொருத்தப்பட்டுள்ளது. மூன்றடி இடைவெளிக்கு குறைவாக நெருங்கினால் எச்சரிக்கை ஒலி எழுப்பும். திருப்பூர் மாநகராட்சியின் இந்த செயலுக்கு அமைச்சர் வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.