என்னை மன்னித்து விடுங்கள் – 500 முறை ஊரடங்கு மீறியவர்களை எழுத சொல்லி தண்டனை வழங்கிய போலீஸ்!

உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டும் விட்டுவிடுமா என்ன? இந்தியாவிலும் தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 273 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்தது.
ஆனாலும் சிலர் அரசாங்க உத்தரவை மீறி வெளியே செல்லும் பொழுது, காவல்துறையினர் சில கடுமையான தண்டனைகளும் கொடுத்து வந்தனர். அதேசமயம் சில இடங்களில் வித்தியாசமான முறையில் நூதன தண்டனைகளும், விழிப்புணர்வுகளும் வழங்கி வந்தனர்.
இந்நிலையில், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் வெளி ஊரிலிருந்து வந்து ரிஷிகேஷ் என்னும் நகரில் தங்கியிருக்கும் சில வெளிநாட்டினர் கங்கை நதிக்கரையோரம் நேற்று சுற்றி திரிந்தனர். அந்நேரம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் வெளிநாட்டினர் என்பது தெரியவந்து உள்ளது.
எனவே இந்த பத்து பேரையும் “நான் ஊரடங்கு விதிகளைப் பின்பற்ற வில்லை என்னை மன்னித்து விடுங்கள்” என 500 முறை தனித்தனியாக எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கியுள்ளனர். தாங்கள் செய்த தவறை உணர்ந்து எழுதிய வெளிநாட்டினருக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்து போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024