இன்னைக்கு ஞாயிற்று கிழமை கோழி கறி எடுக்க போறிங்களா அப்போ இத படிங்க

மனித சமூகத்தின் புராதன வரலாற்றில் கோழிகளுக்கும் முக்கிய இடம் இருந்துள்ளது. சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் கோழிகளை வீடுகளில் வளர்த்துள்ளான், இன்று பண்ணைகளை அமைத்து மிகுந்த பராமரிப்புடன் வளர்க்கப்படுகிறது.


2003-ல் உலகில் இவற்றின் எண்ணிக்கை 24-பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும் பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

கோழிகளிலே நாட்டுக்கோழி,  பிராய்லர்கோழி, நெருப்புகோழி, வான்கோழி, நீர்க்கோழி, இப்படி பலவகைகளில் இருந்தாலும் தற்காலத்தில் மக்கள் மத்தியில் அதீத பிரசித்தி பெற்றது பிராய்லர் கோழிதான்,

புற்றுநோய் 



அதன் அடர் சிவப்பு நிறத்துக்காக செயற்கை பவுடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை இது போன்று நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருளில் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் உலக அளவில் உள்ள ஆய்வாளர்கள். பொன்சியூ, எரித்ரோசின் என்கிற இரு ரசாயன நிறமிகளைப் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியன்ட் ப்ளூ, இண்டிகோ கார்மைன் நிறமிகள் மூலம் ஊதா நிறம் கிடைக்கும். இதுபோன்ற 8 வகை நிறங்களை ஐஸ்க்ரீம், ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கெட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என 7 வகை உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு. 


அதுவும் 10 கிலோ உணவுக்கு ஒரு கிராம் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது வரைமுறை. அளவு கூடினால் நிறங்களின் நச்சுத்தன்மை உணவைப் பாதித்துவிடும் என்பதால்தான் அரசு இந்த வரைமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிக்கனுடன் எந்த நிறமிகளையும் சேர்க்கக்கூடாது என்கிறது உணவுச்சட்டம். நடைமுறையில் இதற்கு நேர் எதிரான செயல்பாடு கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல சிவப்பு நிறத்தில் பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக செயற்கை நிறத்தை அள்ளிக் கொட்டுகின்றனர். 





கோழி வளர்ப்பு 




நாட்டுக்கோழி 200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை பிராய்லர் 45 நாட்களில் வளர்கிறதென்றால் சும்மாவா? உண்மையில் அது வளரவில்லை… ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கிறார்கள். பிராய்லர் கோழிகள் சூரிய ஒளியே படாத கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கால்சியம் கிடைக்கப் பெறுவதில்லை. ஓடியாடாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் புரதத்தை விட பிராய்லரில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. 100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. அதுவே 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறது. 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதம்தான் இருக்கிறது. அதுவே நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதம் இருக்கிறது.நாட்டுக்கோழியில் கொழுப்பை விட புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது. பிராய்லர் கோழியோ, முட்டையில் குஞ்சாகி வெளியே வந்த 45 நாட்களுக்குள் இறைச்சிக்காக அழிக்கப்படுகிறது.  கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும் உணவே சிறந்தது. அந்த அடிப்படையிலும் நாட்டுக்கோழிதான் சிறந்தது. 

நோய் 


இன்றைக்கு அதிவேக வளர்ச்சிக்குப் போடப்படும் ஹார்மோன் ஊசிகள். மனிதர்களுக்கு ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்தினாலே பல்வேறு விளைவுகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது. இந்த நிலையில் குறுகிய ஆயுள் கொண்ட சிறிய கோழிகளுக்கு ஹார்மோன்களை செலுத்துவதன் மூலம், அதன் உடல் முழுவதும் பாதிப்புகள் பரவிவிடுகின்றன. இந்தக் கோழியை சாப்பிடும் நம் உடலிலும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

பிராய்லர் கோழிகளுக்கு உடல் மற்றும் மன நலப் பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. Sudden Death Syndrome எனப்படும் திடீர்ச்சாவு பிராய்லர் கோழிகளுக்கு ஏற்படுகிறது. நாட்டுக்கோழிகளுக்கு Dexa Hexanoic Acid எனப்படும் ரசாயனம் அதிகளவில் சுரப்பதால் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். பிராய்லர் கோழிகளில் இந்த ரசாயனத்தின் அளவு குறைவாக இருப்பதால் மூளை வளர்ச்சி இருக்காது. மூளை வளர்ச்சியில்லாத, உடல் வலுவில்லாத பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பைத் தவிர்த்து நமக்கு வேறேதும் கிடைக்கப்போவதில்லை’’ என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .

கட்டுரை தொகுப்பு -நித்யா மனோகர் 

author avatar
Castro Murugan

Leave a Comment