ப்ரீபெய்டு முறையில் தினமும் 3 மது பாட்டில்.! ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..!

  • ஆந்திராவில் ப்ரீபெய்டு முறையில் மது விற்பனை செய்ய ஜெகன் மோகன் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
  • ஆதார் மற்றும் பேன் கார்ட் ஜெராக்ஸ் கொடுத்து ஐந்தாயிரம் ருபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவிக்கு வந்த பிறகு புது புது திட்டத்தை அமலுக்கு கொண்டு வருகிறார். இதனை மக்களும் வரவேற்று வருகிறார்கள். அதில் தற்போது மது அருந்துபவர் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் மதுவிலக்கு திட்டத்தை அமல்படுத்துவதாக ப்ரீபெய்டு முறையில் மது விற்பனை செய்ய ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.

அதில் 25 வயது வரம்புக்கு மேல் இருப்பவர் அவரகளது ஆதார் கார்ட் மற்றும் பான் கார்ட் ஜெராக்ஸை கொடுத்து அதற்கு ரூ.5,000 முன் பணம் செலுத்தி ப்ரீபெய்டு கார்டை வாங்கிக்கொள்ளலாம். மேலும் இந்த கார்டை கொண்டு ஒருநாளைக்கு ஒரு நபரால் மூன்று மது பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும் எனவும், இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்