டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாகும் நிலவேம்பு கசாயம்…!

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம்‌ தொடங்கி இதுவரை 5600 பேருக்கு டெங்குவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தை சாமி தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு சித்த வைத்திய சிகிச்சை நல்ல பலன் தருவதை உணர்ந்தே காய்ச்சல் பாதித்தவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவம் காய்ச்சலை 64 வகைகளாக வகைப்படுத்தி உள்ளது. வாதக் காய்ச்சல், பித்தக் காய்ச்சல், கபக் காய்ச்சல் என 64 வகைகள் உண்டு. இந்த காய்ச்சல்களின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை பற்றி பலநூறு ஆண்டுகளுக்கு முன்பா‌கவே வரையறுத்துள்ள சித்த மருத்துவத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு நல்ல மருந்து என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

அனைத்து விதமான சுரத்திற்கும் நிலவேம்புக் குடிநீரைப் பயன்படுத்தலாம் எனவும் சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற அனைத்து விதமான காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீரைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். இதுதவிர மலைவேம்பு, பப்பாளி சாறு போன்றவையும் சிறந்த நிவாரணம் என்கிறார்கள்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆங்கில மருத்துவர்களும் சித்த மருத்துவத்தையே ‌பரிந்துரை செய்கிறார்கள்.

author avatar
Castro Murugan

Leave a Comment