ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஹாசன் அலி நீக்கம் ..!

ஆஸ்திரேலியாவிற்கு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.இந்த 3 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கைஅணிபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து3 டி20 போட்டியில் விளையாடியது. இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி முதுகு வலி பிரச்சனையால் அந்த தொடரில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் வருகின்ற 3 , 5 மற்றும் 8 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி விளையாட விளையாட மாட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அவர் மேலும் மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் 21-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியா எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அப்போது அவரின் உடல்நிலையை சோதனை செய்த பின்னரே அதுவும் கூறப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கடந்த ஆகஸ்ட் மாதம் துபாயில் இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024