டோனி சிங்கப்பூரில் தொடங்கிய கிரிக்கெட் அகாடமி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் கிரிக்கெட் அகடாமி நடத்தி வருகிறார்கள்.அவைகளில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் தனித்தனியாக கிரிக்கெட் அகாடமிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் டோனியும் இப்போது சேர்ந்துள்ளார். இந்த கிரிக்கெட் அகாடமியை டோனி வெளிநாட்டில் தொடங்கியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதத்தில் துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து துபாயில் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் அகாடமி தொடங்கினார். அந்த கிரிக்கெட் அகாடமிக்கு எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என பெயரிடப்பட்டது.
படிப்படியாக அவரது கிரிக்கெட் அகாடமியை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள செயின்ட் பாட்ரிக் பள்ளியில் புதிய கிரிக்கெட் அகாடமியை இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி  தொடங்கியுள்ளார்.
இந்த பயிற்சி மையத்தின் தொடக்கவிழா நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் டோனி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி மையத்தில் ஆறு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment