ஃபேஸ்புக்கில் கூடா நட்பு பத்தாம் வகுப்பு மாணவியின் உயிரை காவு வாங்கியுள்ளது!

ஃபேஸ்புக்கில் கூடா நட்பு பத்தாம் வகுப்பு மாணவியின் உயிரை பறித்துள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த நவீன் ரெட்டி என்பவர் மகபூப்நகர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை பேஸ்புக் மூலம் கண்டறிந்து அவருடன் பேஸ்புக்கில் பழகி வந்துள்ளார். பின்னர், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

சங்கராயபள்ளி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நவீன் ரெட்டி அந்த மாணவியை கீழே தள்ளியுள்ளார். இதில் மாணவி தலையில் அதிகமாக அடிபட்டு ரத்தம் வந்து அந்த மாணவி அங்கேயே உயிரிழந்துவிட்டார்.

இதில் பதறிய நவீன் ரெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிரிழந்த மாணவியின் பெற்றோர் தன் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பெயரில் தீவிரமாக விசாரித்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து நவீன் ரெட்டியுடன் அந்த மாணவி செல்வதை கண்டறிந்துள்ளனர்.  பின்னர் நவீன் ரெட்டியை தேடுதல் வேட்டைக்கு பின்னர் பிடித்து உள்ளனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில், நவீன் ரெட்டி தான் செய்த தவறை ஒப்புக் கொண்டுள்ளான். பின்னர் அந்த மாணவியின் சடலத்தையும் காண்பித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.