5 வருடத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்! 12 வருடத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் மயக்க என்ன. இப்படம் விமர்சகர்கள் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், பெரிய வெற்றியை பெறத் தவறியது. தற்போது, மீண்டும் செல்வராகவன் – தனுஷ் கூட்டணி ஐந்து வருடத்துக்கு பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
கலைப்புலி எஸ் தாணு ஏற்கனவே தனுஷை வைத்து மூன்று படங்கள் ஒப்பந்தம் செய்திருந்தார். அதில் ஒரு படம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக உள்ள அசுரன் இன்னொரு திரைப்படம் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள தனுஷ் படம். அடுத்ததாக. செல்வராகவன் திரைப்படம் என மூன்று படங்கள் வெளியாக உள்ளது.
தனுஷ் – செல்வராகவன் திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் செல்வராகவன் – யுவன் கூட்டணியில் கடைசியாக புதுப்பேட்டை படம் வெளியானது. அதற்கடுத்ததாக 12 வருடத்திற்கு பிறகு இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை அசரடித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024