சச்சினுக்கு முன் டிராவிட்டுக்கு ஹால் ஆஃப் ஃபேம்மில் இடம் பெற இதுதான் காரணம் !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் “ஹால் ஆஃப் ஃ பேம் ” என்ற கவுரவத்தை சச்சினுக்கு வழங்கி உள்ளது. இந்த கவுரவம் இந்திய சார்பில் வாங்கிய ஆறாவது வீரராக சச்சின் உள்ளார்.இதற்கு முன் சுனில் காவஸ்கர் (2009) , கபில் தேவ் (2009) ,பிஷன் சிங் (2009) , கும்ப்ளே (2015) , திராவிட் (2018)  ஆகியோர் பெற்று உள்ளனர்.

இந்நிலையில் இந்த பட்டியலில் சச்சின் முன் திராவிட் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்பதை பற்றி பார்ப்போம். இந்த “ஹால் ஆஃப் ஃ பேம் ” என்ற கவுரவத்தை  2009-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கி வருகின்றனர்.

இப்பட்டியலில் ஒரு பேட்ஸ்மேன் இடம் பெறவேண்டும் என்றால் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் 8000 ரன்கள் அடித்தும் , 20 சத்தங்கள் அடித்து இருக்க வேண்டும்.அதுவே ஒரு பந்து வீச்சாளர்களாக இருந்தால் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் குறைந்தது 200 விக்கெட்டை பறித்து இருக்க வேண்டும்.

Image result for டிராவிட்

இந்த 200 விக்கெட்டையும் ஒரு நாள் போட்டியாக இருந்தால் 30 ஸ்டைரிக் ரேட்டும் ,டெஸ்ட் போட்டியாக இருந்தால் 50 ஸ்டைரிக் ரேட் உடன் எடுத்து இருக்க வேண்டும்.மேலும் இந்த பட்டியலில் தேர்வு ஆக வேண்டும் என்றால் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

இந்நிலையில் இந்த பட்டியலில் சச்சின் முன் திராவிட் தேர்வாக காரணம் 2012-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து திராவிட் ஓய்வு பெற்றார்.ஆனால் சச்சின் 2013-ம் ஆண்டுதான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.எனவே இந்த அடிப்படையில் தான்  சச்சின் முன் திராவிட் தேர்வானார்.

Image result for sachin

இதுவரை இந்த பட்டியலில் 87 பேர் தேர்வாகி உள்ளனர்.அதில் இங்கிலாந்தில் இருந்து 28 பேரும் , ஆஸ்திரேலியாவில் 26 பேரும் , வெஸ்ட் இண்டீஸில் 18 பேரும் , பாகிஸ்தானில் 5 , தென்னாப்பிரிக்கா மற்றும்  நியூஸிலாந்து 3 பேரும் , இலங்கையில் ஒரு பேரும் இப்பட்டியலில் இடம் பெற்றனர்.

author avatar
murugan