தூத்துக்குடியில் மாசு ஏற்பட்டால் நங்கள் எப்படி பொறுப்பாக முடியும் – வேதாந்தா வாதம் !
தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு பாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை எப்படி பொறுப்பாக முடியும் என்று வேதாந்தா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கோரி நடந்து வரும் வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது வாதிட்ட ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்பட ஸ்டெர்லைட் தான் காரணம் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் இதனால் வீண் பலி சுமத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அதிக மாசுபாட்டிற்கு காரணம் தூத்துக்குடியில் இருக்கும் அனல் மின் நிலையங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வாதிடப்பட்டது.வேதாந்தா தரப்பு வாதங்கள் இன்னும் நிறைவடையததால் இதனை கேட்ட நீதிபதிக்கு வழக்கை நாளை தள்ளி வைத்தனர்.