தூத்துக்குடியில் மாசு ஏற்பட்டால் நங்கள் எப்படி பொறுப்பாக முடியும் – வேதாந்தா வாதம் !

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு பாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை எப்படி பொறுப்பாக முடியும் என்று வேதாந்தா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கோரி நடந்து வரும் வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது வாதிட்ட ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்பட ஸ்டெர்லைட் தான் காரணம் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் இதனால் வீண் பலி சுமத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், அதிக மாசுபாட்டிற்கு காரணம் தூத்துக்குடியில் இருக்கும் … Read more

நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை!

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு … Read more

தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி!

தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிகள் தருவை கூடைப்பந்து மைதானம், விகாசா பள்ளி, லசால் பள்ளி, கிரசண்ட் பள்ளி மைதானங்கள் ஆகிய 4 இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடக்கிறது. போட்டி தொடக்க விழா வருகிற 26-ந்தேதி மாலை 6 மணிக்கு தருவை மைதானத்தில் நடக்கிறது. … Read more

கோவில்பட்டியில் கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு!

கோவில்பட்டி புதுகிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்ற ரமேஷ் (வயது 42). தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரான இவர் முன்னாள் நகரசபை கவுன்சிலர் ஆவார். இவர் கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையும், அதன் மாடியில் சர்வீஸ் மையமும் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தனது கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு மேஜையில் இருந்த ரூ.3,200-ஐ திருடினர். … Read more

ஸ்டெர்லைட் விவகாரம் : தூத்துக்குடி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட 15 கிராம மக்கள் பேரணி !!

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினா். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அவா்கள் வழியுறுத்தி போராடி வருகின்றனா். இந்த பேரணியில் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று இணைந்து  சென்று மாசு கட்டுப்பட்டு மையத்தை முற்றுகையிட  போவதாக முடிவு செய்துள்ளனா். இந்த போராட்டத்தில் ஏராளமான போராட்டகாரா்கள் கருப்பு சட்டைகள் அணிந்து கொண்டு மாசு கட்டுப்பட்டு மையத்தை நோக்கி பேரணியாக சென்றனா்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக மூடியது கண்துடைப்பு நாடகம் வைகோ குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-வது கட்டமாக நேற்று மாலையில் செய்துங்கநல்லூரில் இருந்து வாகன பிரசார பயணத்தை தொடங்கினார். அவர் திறந்தவேனில் நின்று பேசும்போது கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு எடுக்கும் முடிவால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாகி விடும். கர்நாடக அரசு மேலும் 2 அணைகளை கட்டினால், நமது மாநிலத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காத நிலை ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு, காவிரி மேலாண்மை வாரியம் … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் – திருநாவுக்கரசர் பேச்சு!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், ஆறுமுகநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், வக்கீல்கள் மகேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சற்குரு வரவேற்று பேசினார். தமிழகத்தில் 30 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளனர். காமராஜர் பிறந்த … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அ.குமரெட்டியபுரத்தில் 68–வது நாளாக மக்கள் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று  68–வது நாளாக போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோ‌ஷம் எழுப்பினர். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகேயும் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில்வர்புரம் பகுதியில் பாளையாபுரம், சுப்பிரமணியபுரம், சில்வர்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் காற்றில் மாசு கலந்து இருப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாத … Read more

தூத்துக்குடியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணியில் பள்ளி ,கல்லூரி மானவார்கள் ..!

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். நோயினால் உடல் நலம் பாதிக்கப்படும் போது, ஒரு மனிதனின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த முகாமில் அரசு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி தூத்துக்குடி அரசு … Read more

தூத்துக்குடியில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியல் ..!

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மேலத்தட்டப்பாறையிலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளத்திலும், திருச்செந்தூர் தாலுகா தென்திருப்பேரையிலும், சாத்தான்குளம் தாலுகா பிடானேரியிலும், கோவில்பட்டி தாலுகா இடைசெவல் பகுதி–2 கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகா புதூர் குளக்கட்டாக்குறிச்சியிலும், எட்டயபுரம் தாலுகா ஆத்திக்கிணறு மற்றும் தி.சண்முகபுரம் … Read more