தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் விசாரணை ஆணையத்திடம் ஜெ. வீடியோ ஒப்படைப்பு!

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை, தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், கடந்த 20ஆம் தேதி வெளியிட்டார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், வெற்றிவேல் மீது, போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தரப்பிலும், வெற்றிவேல் மீது, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை அளிக்குமாறு, வெற்றிவேலுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து, ஜெயலலிதா சிகிச்சை வீடியோ நகலை, வெற்றிவேல் தரப்பில், அவரது வழக்கறிஞர்கள், விசாரணை ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.

source: dinasuvadu.com

Leave a Comment