கலைக்கு எப்படி மதம் இல்லையோ, அதுபோல தீவிரவாதத்திற்கு மதம் இல்லை! கமலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்!

நடிகர் கமலஹாசன், சமீபத்தில் முஸ்லீம் மக்கள் நிறைந்த பிரச்சார கூட்டத்தில் பேசும் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, ஒரு இந்து. அவர் பெயர் நாத்துராம் கோட்சே என கூறியுள்ளார்.

இவரது இந்த பேச்சுக்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் விவேக் ஓபராய் கமலின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ட்வீட்டரில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” கமல் சார் நீங்கள் சிறந்த நடிகர். கலைக்கு எப்படி மதம் இல்லையோ, அதுபோல தீவிரவாதத்துக்கு மதம் இல்லை. கோட்சே தீவிரவாதி என குறிப்பிட்டதோடு நிறுத்தாமல், ஹிந்து என ஏன் குறிப்பிட்டீர்கள்?” என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment