இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களே, ஜாக்கிரதையா இருங்க
- இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும், வலி நீங்குவதற்கான தீர்வுகளும்.
பெண்களை பொறுத்தவரையில், இன்று அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலைகள் செய்கின்றனர். பாரதி கண்ட புதுமை பெண்ணாய், பெண்ணடிமை என்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தங்களது வாழ்க்கையில் வெற்றி சிகரத்தை பெண்களின் எண்ணிக்கை அதிகம்.
இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள்
ஆண்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களையும் இன்று பெண்களும் பயன்படுத்துகின்றனர். பெண்கள் பயன்படுத்தும் முக்கியமான வாகனங்களின் ஒன்று இருசக்கர வாகனம். சிறு வயதிலிருந்தே இரு சக்கர வாகனங்களை பெண்கள் ஓட்ட கற்று கொள்கின்றனர்.
ஆண்களை விட பெண்கள் எப்பொழுதுமே பலகீனமாவார்கள் தான். இருசக்கர வாகனம் ஓட்டும் ஆண்களுக்கு எப்படிப்பட்ட வலிகள் ஏற்படுகிறதோ, அதுபோல பெண்களுக்கும் அது போன்ற வலிகள் ஏற்படும்.
வலி ஏற்படுவதற்கான காரணங்கள்
பெண்களுக்கே உரித்தான பிரச்சனைகள்
பெண்களை பொறுத்தவரையில், பருவத்தின் அடிப்படையில் வலிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பெண்கள் வீட்டு வேலைகளை செய்கிறார்கள். மாதவிடாய் பிரச்னை, கர்ப்பம், பிரசவம், மோனோபாஸ் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதால், இவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது, பல உடல் ரீதியான வலிகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
பிரசவமான பெண்கள்
பெண்கள் கர்ப்பம் தரித்து ஒரு குறிப்பிட்ட காலத்தில், அவர்களது எடை 12 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும்.அதிகரிக்கின்ற இந்த எடை, முதுகுப்பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இந்த அழுத்தம் பிரசவத்திற்கு மீராகு இயல்பு நிலைக்கு திரும்பி விடும். இந்த மாற்றங்கள், பிரசவமான பெண்கள் அதிக நேரம் இருசக்கர வாகனங்களை ஓட்டினால், இவர்களுக்கு ஏற்படும் வலி தவிர்க்க முடியாத ஒரு வழியாக மாறி விடும்.
மோனோபாஸ்
ஐம்பது வயதை தொடும் பெண்களுக்கு, மோனோபாஸ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடுவதால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து விடுகிறது. எலும்பு அடர்த்தி குறைவதால், ‘ ஆஸ்டியோபொராஸிஸ் ‘ போன்ற பிரச்சனையால் ஏற்படக் கூடும்.
இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது, இந்த பிரச்சனை பல வழிகளை ஏற்படுத்தக்கூடும். இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து, சிகிச்சை
வலிகளை தீர்ப்பதற்கான வலிகள்
வெயிலில் நடக்க வேண்டும்
இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களுக்கு மேற்கண்ட பிரச்சனைகள் காணப்பட்டால், அந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற, 15 நிமிடங்களாவது நமது உடலில் வெயில்படும்படி நடக்க வேண்டும்.
இப்படி வெயில் நடந்தால் தான் நமது உடலை பலப்படுத்தக் கூடிய கால்சியம் சத்து நமக்கு கிடைக்கும். கால்சியம் சத்து உடலை பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மருத்துவ ஆலோசனை
இப்படிப்பட்ட வலிக்கான அறிகுறிகள் தென்படும் போது, கடைகளில் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாமல், உடனடியாக எலும்பிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை சந்தித்து, மருத்துவரின் நேரடி ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.
இப்படிப்பட்ட பிரச்னை உள்ள சிலருக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகள் சரியாக உட்கொண்டு வந்தால், உடனடியாக சரியாகி விடும். ஒரு சிலருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படும்.
எனவே இப்படிப்பட்ட சிகிச்சை தேவைப்படுபவர்கள், மருத்துவரை சந்தித்து, எக்ஸ்ட்ரே எடுத்து, பின் தங்களது உடலில் உள்ள பிரச்சனைகளை அறிந்து, மெர்சிகிச்சையை மேற்கொள்வது சிறந்தது.