மணமணக்கும் ஃபிஷ் ஃபிங்கர்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா?

மீன்களை விரும்பாத நபர்களே இருக்க முடியாது.  மீன்களில்  சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.அவ்வாறு மீன்களை நாம் தினமும் உணவில் எடுத்து கொண்டால் பல விதமான நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளாலாம்.

  •  ஃபிஷ் ஃபிங்கர்ஸ்  செய்வது எப்படி?

மீன்களை விரும்பாத குழந்தைகளுக்கு இவ்வாறு நாம் செய்து கொடுப்பதால் அவர்கள் மீன்களை விரும்பி உண்ணுவார்கள்.மண மணக்கும் ஃபிஷ் ஃபிங்கர்ஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.

தேவையான பொருட்கள்

வஞ்சரம்  – அரை கிலோ

வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

எலுமிச்சை பழம் – இரண்டு (சாறு எடுக்கவும்)

ரொட்டித்தூள் – 1௦௦ கிராம்

முட்டை – மூன்று

செய்முறை:

மீன்களை எடுத்து சுத்தம் செய்து தோல் நீக்கி  விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக்கொள்ளவும்.அதற்கு பிறகு உப்பு, எலுமிச்சைபழசாறு, மிளகு தூள் ஆகிய பொருட்களை மீனில் கலந்து  பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

முட்டைகளை  ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணையில் போட வேண்டும். பின்னர் மீன் நன்கு வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்போது சூடான சுவையான ஃபிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி.

Leave a Comment