அடுத்தடுத்து இரண்டு ரோல்களில் தனுஷிற்கு குவிந்து வரும் வாய்ப்பு உற்சாகத்தில் ரசிகர்கள்

  • நடிகர் தனுஷ் தற்போது பல்வேறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் தற்போது  பல்வேறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் வட சென்னை,மாரி 2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இதையடுத்து தற்போது வெற்றிமாறன் கூட்டணியில் “அசுரன்” படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிகர் தனுஷ் அப்பா -மகன் என இரண்டு ரோலில் நடிக்கிறார்.இதனை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இந்த படத்தை எதிர்பார்த்து  காத்து கொண்டிருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து இவர் துரை செந்தில்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.அந்த படத்திலும் இவர் இரண்டு ரோலில் நடிக்கிறாராம்.

Leave a Comment