SRHVSRCB:இன்று ஹைதராபாத் -பெங்களூரு!தொடர் தோல்வி நெருக்கடியில் பெங்களூரு அணி

SRHVSRCB:இன்று ஹைதராபாத் -பெங்களூரு!தொடர் தோல்வி நெருக்கடியில் பெங்களூரு அணி

இன்று நடைபெறும் முதலாவது ஐபில் போட்டியில்  சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது.

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  11-வது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியை பொருத்தவரை இந்த அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்துவருகிறார்.ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வருடாவருடம் சொதப்புவதை போலவே இந்த வருடமும் தனது சொதப்பலை தொடங்கியுள்ளது.பெங்களூரு அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்புசாம்பியன் அணியான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியுடன் மோதியது.ஆனால் இந்த போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.இந்த போட்டியில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியை பொருத்தவரை முதல் போட்டியில் புவனேஷ்வர் குமார் தலைமையில் கொல்கத்தா அணியுடன் மோதியது.இந்த போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதியது  ஹைதராபாத்.இதில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 198 என்ற இமாலய இலக்கை வார்னர்,பைர்ஸ்டோவ்,விஜய் சங்கர் உள்ளிட்டோரின் அதிரடி ஆட்டத்தால் 19 ஒவேரிலே வெற்றி பெற்றது.இந்த வெற்றி ஹைதராபாத்  அணிக்கு  ஊக்கமாகவே உள்ளது.

இருந்தாலும்  இன்றைய போட்டியில் பெங்களூரு அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இன்று வெற்றிக்காக போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அதேபோல் ஹைதராபாத் அணியும் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய உறுதியாக உள்ளது.

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *