பாஜக நிகழ்ச்சி மேடை சரிந்து பலர் படுகாயம்: ஹோலி பண்டிகையின் போது விபரீதம்

  •  கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
  • உத்திரபிரதேச மாநிலத்தில் விழா மேடை சரிந்து விழுந்து பாஜக நிர்வாகிகள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது

உத்திரபிரதேச மாநிலத்தின் சம்பல் நகரில் ப.ஜ.க நடத்திய நிகழ்ச்சியில் மேடை ஒன்று போடப்பட்டிருந்தது. அந்த மேடை சரிந்து விழுந்து நிர்வாகிகள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஹோலி பண்டிகையையொட்டி விவசாயிகள் அணி பங்குபெறும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் பாஜக முக்கிய நிர்வாகி பேசிக்கொண்டிருந்தபோது பலர் மேடையில் நின்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேடை சரிந்து பல முக்கிய நிர்வாகிகள் காயமடைந்தனர். ஒரு சிலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
Srimahath

Leave a Comment