உஷார்!! ரீசார்ச் செய்யாத கஸ்டமர்ஸ்களை நீக்கும் எண்ணத்தில் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா!!!

இந்திய மொபைல் நெட்ஒர்க் சந்தை காலத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து விடலாம், அது ஜியோ வந்த பிறகு, வருவதற்கு முன்னர் என்று! அந்தளவிற்கு மொபைல் நெட்ஒர்க் சந்தையை புரட்டி போட்டுவிட்டது ரிலையன்ஸ் ஜியோ. டேட்டா ஸ்பீட், டேட்டா பேக்கேஜ் ரேட் என முற்றிலும் மாறிவிட்டது. பல ஸ்மார்ட் போன் யூசர்கள் தங்களது முதல் சிம்மாக ஜியோவையும், இரண்டாவது இக்கமிங், மற்றும் வாட்சப் நம்பருக்காக ஏர்டெல், வோடஃபோன் நம்பர்களை வைத்திட்டுள்ளனர்.

அப்படி வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தான் தற்போது வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது தன் நம்பருக்கு மாதாமாதம் குறைந்த கட்டணத்தில் கூட ரீசார்ஜ் செய்யாதவர்களை நீக்கிவிடும் எண்ணத்தில் உள்ளன.

அப்படி மாதம் குறைந்தது 35 ரீசார்ஜ் செய்யாதவர்களை ஏர்டெல் நிறுவனம் நீக்கிவிடும் எண்ணத்தில் உள்ளது. அதற்கடுத்தது வோடஃபோன் நிறுவனம் தனது 2ஜி சந்தாதாரர்களை நீக்கிவிடும் எண்ணத்தில் உள்ளது. இந்த நீக்கல் நடவடிக்கை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், சீக்கிரம் வந்துவிடும் என்று கூறிவருகின்றனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment