96 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.! 

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்திலிருந்து

By ragi | Published: Jul 11, 2020 09:15 AM

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2018ல் வெளியான வெற்றி படங்களில் ஒன்று 96. ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இன்றும் அந்த படத்திலுள்ள பாடலை ரசிப்பவர்கள் இருப்பார்கள். அதனையடுத்து இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்தார் பிரேம். அதில் சமந்தா மற்றும் ஷர்வானந்த் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது பிரேம்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 96 படத்திலுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹோட்டலில் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி பேசிக் கொண்டுள்ள அந்த காட்சியை எடுக்கும் போது நடக்கும் சுவாரஸ்யமான பேச்சுடன் கூடிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 
View this post on Instagram
 

#96 #96themovie #vijaysethupathi #trisha #goodolddays #memories

A post shared by C. Premkumar (@prem_storytelling) on

Step2: Place in ads Display sections

unicc