#அசத்தல்# 1 லட்சம்KMக்கு சாலை!பிளாஸ்டிக் சுவரஸ்யம்!

‘பிளாஸ்டிக்’ கழிவுகளை பயன்படுத்தி 11 மாநிலங்களில் 1 லட்சம் கி.மீ., துாரமுள்ள சாலை அமைத்து அசத்தி உள்ளது.

இந்தியா நாள்தோறும்  25 ஆயிரத்து, 940 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இதில் 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட  நிலையில், மீதம் உள்ளவை நிலத்தில் தான் சேருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட அளவு எரிக்கப்படுவதன் மூலமாக காற்று மாசடைகிறது.

மேலும் தண்ணீரில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலிலும் சேர்கின்றன மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த 2016ல் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, முதல் முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஹரியானாவின் குருகிராம் மாநகராட்சி, சாலைகள் அமைக்க பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தியது. இதே போல் ஜம்மு – காஷ்மீரில் சுமார் 270 கி.மீ சாலை அமைக்க, பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு இதுவரை, பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி 11 மாநிலங்களில் 1 லட்சம் கி.மீக்கு., சாலை அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும்  இது இரு மடங்காகும் என்று தெரிகிறது. ஒரு கி.மீக்கு  சாலை அமைக்க, 9 டன் தார்  மற்றும் 1 டன் பிளாஸ்டிக் கழிவு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக 1 டன் தாரின் கொள்முதல் விலையாகிய ரூபார் 30 ஆயிரம் சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha