உதவிப்பண பிரிப்பு தகராறில் 90 வயது மனைவியை அடித்தே கொன்ற 92 வயது முதியவர்!

உதவிப்பண பிரிப்பு தகராறில் 90 வயது மனைவியை அடித்தே கொன்ற 92 வயது முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

குண்டூர் மாவட்டத்தில் உள்ள யலவர்லு எனும் கிராமத்தில் தனது 90 வயது மனைவி அப்ரயம்மா உடன் வசித்து வரும் 92 வயது முதியவர் தான் சாமுவேல். ஆந்திரா அரசாங்கத்தால் முதியவர்களுக்கு மாதந்தோறும் 2,250 ரூபாய் கொடுக்கப்படுகிறது. அது போல இவர்களுக்கும் மாத மாதம் இந்த உதவித்தொகை வரும். ஆனால்  இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறால் கடந்த 10 வருடங்களாக பிரிந்து தான் வாழ்கிறார்கள்.

இந்நிலையில், அப்ரயம்மா கைக்கு தான் இந்த உதவித்தொகை கிடைக்கும். இந்த பணத்தை வாங்க மாத மதம் சாமுவேல் ஐயா வருவது வழக்கம்.அது போல இந்த மாதம் வந்து பணத்தை கேட்டதற்கு அவரது மனைவி கொடுக்க மாட்டேன் என தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஊன்றி நடந்து வந்த தடியை வைத்து அந்த மூதாட்டியை அடித்துள்ளார் சாமுவேல். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சாமுவேலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

author avatar
Rebekal