ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 913 பேர் உயிரிழப்பு.!

உலக முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது. பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,85,807 ஐ எட்டியுள்ளது. இதனிஅடையே சீனாவில் தொடங்கிய வைரஸ், தற்போது அந்நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளில் வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இந்நிலையில், ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 913 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 7,845 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,956 ஆக உள்ளது. மேலும் ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,716 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் தற்போது சிகிச்சை பெற்று வரும் 63, 460 பேரில் 5, 231 பேர் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் 16,780 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்