6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் ஓடிய 9 மாத கர்ப்பிணி!

6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் ஓடிய 9 மாத கர்ப்பிணி.

சாதாரணமாக ஒரு பெண்ணால் நீண்ட தூரம் நடந்தாலே, ஒரு அளவு தூரத்துக்கு மேல் அவர்களால் நடக்க முடியாது. களைத்து விடுவார்கள். ஆனால், நிறை மாத கர்ப்பிணியான தடகள வீராங்கனை மக்கெனா மைலர் செய்துள்ள சாதனை பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.

தடகள வீராங்கனை மக்கெனா மைலர் 9 மாத நிறை மாத கர்ப்பிணியாவர். இவர் 6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். இவரது இந்த சாதனை உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது இந்த சாதனை புரிய அவரது துணையும் உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்தியுள்ளார். தடகள வீரரான மக்கெனா மைலர் தனது பிறக்காத குழந்தையுடன் தனது ஓடும் இலக்கை நிறைவு செய்தது, சாதாரண சாதனை இல்லை. ஆரோக்கியமாக இயங்கும் பழக்கமுள்ள ஒரு சாதாரண நபர் வழக்கமாக சராசரியாக 9-10 நிமிடங்களில் 1.6 கி.மீ (1 மைல்) ஓட முடியும். ஆனால் மைலர் அதை கிட்டத்தட்ட பாதி நேரத்தில் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.