நைஜீரியாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 89 தீவிரவாதிகள் உயிரிழப்பு

நைஜீரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 89 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியா ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும்.இந்த நாட்டில் ஐஸ் உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகிறது.
இந்த தீவிரவாத அமைப்புகள் மக்கள் மீதும்,பாதுகாப்பு படையினர் மீதும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் அங்கு உள்ள சஃப்பாரா மாகாணம் சூர்மி பகுதியில் தீவிரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் பதுங்கி இருந்த 89 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அவர்களின் பிடியில் இருந்த 5 பேர் மீட்கப்பட்டனர்.மேலும் இந்த தாக்குதலில் ராணுவத்தினர் யாருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.