700 காளைகள், 600 வீரர்கள் கலந்து கொள்ள தயாரா இருக்கும் ஜல்லிக்கட்டு களம்.!

  • மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதி நடைபெற உள்ளது.
  • ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 600 வீரர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் விழா கமிட்டிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

வருடந்தோறும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அங்கங்கே நடைபெறும். அதுவும் பொங்கல் பண்டிகை வந்தாலே காளை மாடுகள் சீறி பாயும், ஜல்லிக்கட்டுக்கு பல தடைகள் வந்தாலும், தடையை உடைத்தெறிந்து போட்டிகள் சிறப்பாக மதுரை மன்னியில் நடக்கும். அதை பார்க்க பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் சென்று போட்டியை பார்த்து வருவார்கள்.

இதனிடையே வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதி நடைபெறுவதை அடுத்து, அதற்கான ஆயத்த பணிகளை கிராம கமிட்டியினர் மேற்கொண்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்றுத்திடலை சுத்தபடுத்தி, காளைகள் வெளியேறும் வாடிவாசலுக்கும், பார்வையாளர்கள் அமரும் மாடத்திற்கும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் பாலமேடு ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 600 வீரர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் விழா கமிட்டிக்கு அனுமதி வழங்கியுள்ளது. சிறந்த வீரருக்கு நாட்டுமாடும், சிறந்த காளைக்கு மாருதி காரும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்