7 லட்சம் நிதி திரட்டிய இந்திய ஹாக்கி அணியின் சிங்கப்பெண்கள்..!

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும்  கடுமையான ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழை எளிய மக்கள்  கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தேவையான உணவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நிதி திரட்டுவதற்காக , இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆன்லைன் மூலம் உடல்தகுதி சவால் போட்டியை நடத்தி வருகிறது. இதன்படி, வீராங்கனைகள் அளிக்கும் முதல் தகுதி சவாலை ஏற்று செயல்படும் ரசிகர்கள் நன்கொடை வழங்க வேண்டும்.
18 நாட்கள் நடத்தப்படும் இந்த சவால் நிகழ்ச்சியில் முதல் 4 நாட்களில் மட்டும் ரூபாய் 70 லட்சம் திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.