அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா தாக்கல்.!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் 2வது நாளான இன்று சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது, நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது, தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர், நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுக தான் முழு காரணம். காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் 13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம் என்றும் ஆவேசமாக தெரிவித்தார். இதையடுத்து, தற்போது சட்டப்பேரவையில் மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி. இதில், மருத்துவம், பல் மருத்துவம், ஓமியோபதி, இளங்கலை படிப்புகளில் முன்னுரிமை தர உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்