68-வது தேசிய விருது விழா.! விருதுகளைப் அள்ளிச்சென்ற சூரரைப் போற்று படக்குழு…

2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்களை கௌரவிக்கும் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது.

68th national film awards 1

கொரோனா தொற்று காரணமாக திட்டமிடப்பட்ட தேசிய விருது விழா ஒரு வருடம் தாமதமாக நடைபெறுகின்றன. 68-வது தேசிய விருதுகளுக்கான வெற்றியாளர்கள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

68th national film awards

2020 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று  படம் மற்றும் ஹிந்தி படமான தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் சிறந்த பிரபலமான பொழுதுபோக்கு திரைப்பட விருதையும் வென்றது.

soorarai potru 2

இந்நிலையில், சற்று முன் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் நடிகர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகளை வழங்கினார்.

இதையும் படிங்களேன் – நானே வருவேன் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா.?

sooraraipotru 1

தமிழ் சினிமாவில், சூரரைப் போற்று திரைப்படம் மட்டும் மொத்தம் 5 விருதுகளை தட்டி சென்றது. இன்று நடைபெற்ற 68-வது தேசிய விருது விழாவில் கலந்துகொண்ட  சூரரைப் போற்றுபடக்குழு அவர்களுக்கான விருதுகளை பெற்று கொண்டனர்.

sooraraipotru jthika'

சூரரைப் போற்று திரைப்படத்திற்கான சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார் ஜோதிகா பெற்றுக்கொண்டார்.

soorarai potru gv

சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதை  பெற்றுக்கொண்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.

soorarai potru sudha

சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை  பெற்றுக்கொண்டார் இயக்குனர் சுதா கொங்கரா.

NationalAwards

சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை  பெற்றுக்கொண்டார் நடிகர் சூர்யா.

soorarai potru aparana

சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான தேசிய விருதை பெற்றுக்கொண்டார் நடிகை அபர்ணா பாலமுரளி.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment