5 உயிர்களை காப்பாற்றிய 6 வயது குழந்தை….!

நொய்டாவில் 5 உயிர்களை காப்பாற்றிய 6 வயது குழந்தை ரோலி.

நொய்டாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்ட 6 வயது குழந்தை ரோலி  பிரஜாபதி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் சேர்க்கப்பட்டார். அவர் தலையில் ஏற்பட்ட  காயத்தின் தீவிரம் காரணமாக  கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்தனர்.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் குப்தா 6 வயது சிறுமி ரோலி ஏப்ரல் 27-ஆம் தேதி மருத்துவமனைக்கு வந்தார். அவளுக்கு துப்பாக்கி சூட்டு காயம் இருந்தது மற்றும் மூளையில் ஒரு குண்டு இருந்தது. மூளை முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் இருந்தால் கிட்டத்தட்ட அவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பேசினோம் . குழந்தையின் பெற்றோர்களுடன் அமர்ந்து உடல் உறுப்பு தானம் குறித்து பேசினோம். பெற்றோருக்கு அறிவுரை வழங்கி மற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்ற உறுப்பு தானம் செய்ய தயாராக இருந்தால் அவர்களின் சம்மதம் கேட்டோம்.

பெற்றோரின் சம்மதத்தை தொடர்ந்து குழந்தையின் உறுப்புகளை வைத்து ஐந்து உயிர்களை காப்பாற்றியதாக எய்ம்ஸ் மருத்துவர் தெரிவித்துள்ளார். குழந்தையிடமிருந்து கல்லீரல், ,சிறுநீரகங்கள், கார்னியா மற்றும் இதய வால்வு ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் தானம் செய்பவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ரோலியின் தந்தை பிரஜாபதி கூறுகையில் டாக்டர் குப்தாவும் அவரது குழுவினரும் உறுப்பு தானம் எங்கள் குழந்தை உறுப்பு தானம் செய்தால் எங்களின் குழந்தையால் மற்ற உயிர்களை காப்பாற்ற முடியும் என்று எங்களுக்கு ஆலோசனை வழங்கினர். நாங்கள் அதைப் பற்றி யோசித்து அவள் மற்றவர்களின் வாழ்விலும் உயிருடன் இருப்பாள் என்று முடிவுசெய்தோம் மேலும் மற்றவர்கள் புன்னகைக்க அவரும் காரணமாக இருப்பாள் அதற்கு நாங்கள் சம்மதம் அளித்தோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here