ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 57 வயதான பிரிகேடியர்…!

புனேயில், ஏப்ரல் 18ஆம் தேதியன்று 57 வயதான பிரிகேடியர் ஒருவர் ரயிலின் முன் குதித்து தற்கொலை.

புனேயில், ஏப்ரல் 18-ஆம் தேதியன்று 57 வயதான பிரிகேடியர் ஒருவர் ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீஸ் நான்கு மூத்த ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஒரு அதிகாரி கூறுகையில், பிரிகேடியரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு இராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பிரிகேடியர் தரவரிசை அதிகாரி, ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் மேஜர் பதவிகளில் உள்ள இரண்டு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக   போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் பணியமர்த்தப்பட்ட பிரிகேடியர் ஏப்ரல் 18-ஆம் தேதி தனது பணியாளரின் காரில் புனே ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அவரிடம் இயக்க கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறிவிட்டு, பிளாட்பார்ம் எண்  3-ல் தண்டவாளத்தில் ஓடிய ரயிலின் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.