ஊரடங்கை மீறியதாக 5,47,649 பேர் கைது.! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5031 பேர்.!

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5031 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,47,649 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5031 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 4,30,206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2517 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது. இதுவரை 5,13,048 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.8,61,58,104 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. 

இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்