அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடுக்கு அனுமதி- உச்சநீதிமன்றம்..!

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சில  மருத்துவர்கள் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாணையில் தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததோடு, அரசாணையையும் உடனடியாக இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

அரசாணை செல்லும்:

இதனை செயல்படுத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.  கடந்த 2 நாட்களுக்கு முன் இரு தரப்பு விவாதங்கள் முடிந்தநிலையில், முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.

 

author avatar
murugan