பரபரப்பு…பேருந்தில் இருந்து கடத்தப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்..தேடுதல் பணியில் தேசிய காவலர் படையினர்.!!

வடக்கு மெக்சிகோவில் சுமார் 50 புலம்பெயர்ந்தோர் அடையாளம் தெரியாத  கும்பலால் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வடக்கு மெக்சிகோவில் சுமார் 50 புலம்பெயர்ந்தோர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர். தெற்கு மாநிலமான சியாபாஸில் இருந்து பேருந்தில் அமெரிக்காவை நோக்கி பயணித்தபோது புலம்பெயர்ந்தோர் கடத்தப்பட்டதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை மீட்க தேசிய காவலர் படையினர் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு ஓட்டுநர்களுடன்  காணாமல் போன பேருந்து, செவ்வாயன்று எல்லை மாநிலமான நியூவோ லியோனில் வடக்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் எப்போது நடந்தது என்பதைக் குறிப்பிடாமல் , புலம்பெயர்ந்தோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேசிய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.