வரலாற்றில் இன்று… பொக்ரான் அணுகுண்டு சோதனை முதல்.. எய்ட்ஸ் தடுப்பூசிதினம் வரை..!

இன்று மே-18  உலக அருங்காட்சியக தினம் மற்றும் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது. 

இன்று மே 18 மூன்று முக்கிய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. முதலில் அருகாட்சியகம் தினம். அருங்காட்சியகமானது, அனைவருக்குமான அறிவு வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கிறது. உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பானது , 1978ஆம் ஆண்டு முதல் மே 18 தினத்தை உலக அருங்காட்சியக தினம் என கொண்டாடப்படுகிறது.

அடுத்து, எய்ட்ஸ் தடுப்பூசி தினம். உலகளவில் பெரும் அர்ச்சுருத்தலை ஏற்படுத்திய எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் தற்போது வரையில் முயன்று வருகின்றனர். இதனை குறிப்பிடும் வகையில் 1998ஆம் ஆண்டு முதல் மே 18ஆம் தேதி உலக எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அடுத்து, இந்தியா முதன் முதலாக இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் 1974 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி, இந்திய ராணுவம் முதன்முறையாக அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்தது .  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள நாடுகளில் அணுகுண்டு சோதனை நடத்திய 6வது நாடாக இந்தியா விளங்கியது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.