29 C
Chennai
Wednesday, June 7, 2023

கடந்த 4 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார்…விராட் கோலி புகழாரம்.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல்...

உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை.! நாளை தான் கடைசி தேதி…

குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் நாளை உடன் நிறைவடைகிறது.

குஜராத் உயர் நீதிமன்ற உதவியாளர் ஆட்சேர்ப்பு 2023:

குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பதவிக்கான காலி இடங்கள் நிரப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு gujarathighcourt.nic.in மற்றும் hc-ojas.gujarat.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 1778 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. இதன் ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 28 தொடங்கி, விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதி மே 19 அதாவது நாளை உடன் நிறைவடைகிறது. இதனால், விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் உடனே சென்று விண்ணப்பியுங்கள்.

ஜூன் 26ஆம் தேதி அப்ஜெக்டிவ் தேர்வும், ஆகஸ்டில் முதன்மை எழுத்துத் தேர்வும், அக்டோபர் மாதத்தில் தட்டச்சுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த பதவிக்கான வயது வரம்பு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21  மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 35 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, விண்ணப்பதாரர்கள் gujarathighcourt.nic.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Gujarat High Court
Gujarat High Court [Image source: gujarathighcourt]