Warren Buffett யையும் விட்டுவைக்காத கொரோனா இதுவரை 50 பில்லியன் இழப்பு

கொரோனா சாமானியர் முதல் பெரும் பணக்காரர் வரை ஒருவரையும் விட்டுவைக்கவில்லை .இதனால் உலகமுழுவதும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது .

Warren Buffett ஒரு அமெரிக்க மிகப்பெரிய  முதலீட்டாளர், இவர் Berkshire Hathaway என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ( CEO ) உள்ளார். அவர் உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், மேலும் 2019 டிசம்பர் நிலவரப்படி 88.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடையவர், இவர்  உலகின் நான்காவது பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில்  வாரன் பபெட்டின் தனது நிறுவனமான Berkshire Hathaway க்கு இந்த காலாண்டில் 50 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் .இதற்கு காரணம் கொரோனா வைரஸினால் உலக பொருளாதாரம் சரிவை சந்தித்து வருவதே என்று குறிப்பிட்டுள்ளார் .

இந்நிலையில், அமெரிக்காவில் இந்த கொரோனா வைரஸால், இதுவரை 11,30,494 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,அங்கு பலி எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

author avatar
Castro Murugan