யூடியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த 5 இளைஞர்கள் கைது..!

கடந்த புதன்கிழமை வடோதராவில்  32 வயது மதிப்புள்ள அபிஷா சுர்வே மற்றும் சுமித் நம்பியார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கள்ள 500 ரூபாய் நோட்டுகளை வைத்து பொருட்கள் வாங்க முயற்சி செய்து உள்ளனர். அப்போது அவர்களை பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் அபிஷா சுர்வே 152 கள்ள 500 ரூபாய் நோட்டுகளையும் , சுமித்திடம் 23 கள்ள 500 ரூபாய் நோட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சூரத் நகரை சார்ந்தவர்கள் என்றும் , சூரத்தில் உள்ள அபிஷேக் மங்குகியா என்ற 23 வயது இளைஞர் இடமிருந்து கள்ளநோட்டுகளை வாங்கியதாக அவர்கள்  கூறினார்.
பின்னர் சூரத் சென்ற போலீசார் சஞ்சய் பர்மார் எனும் இளைஞர் வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்தது காரணமாக கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலை வைத்து நோட்டுகளை புழக்கத்தில் விட்ட  ஆசிஷ் சுரானி , குல்தீர்ப் ரவால் ,  அபிஷேக் மங்குகியா மற்றும் விஷால் சுரானி ஆகிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
அந்த இளைஞர்கள் அனைவரும் 22 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் வைரம் மெருகேற்றும் வேலை செய்து வந்தனர். தற்போது வைரம் விற்பனை சரிவால் வேலைகளை இழந்த அவர்கள் கள்ள நோட்டு எப்படி  செய்வது என  யூடியூப் மூலம் தெரிந்து கொண்டனர்.
இவர்களில் சஞ்சய் பர்மார் மட்டும் 10 வகுப்பு மற்றவர்கள் அனைவரும் எட்டாம் வகுப்பு கூட படிக்கவில்லை சஞ்சய் தனது வீட்டில் 2 கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரம் மற்றும் 91 கட்டு 100 ரூபாய் நோட்டுகளும் , 14 கட்டுகள்  500 ரூபாய் நோட்டுகளை ஆகியவை போலீசார்  கைப்பற்றினர். இதுவரை இவர்கள் கள்ள நோட்டு புழக்கத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் விட்டுள்ளனர்.
 

author avatar
murugan