பள்ளி வாகனம் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் துண்டான 5 வயது சிறுவனின் கை.!

பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூரில் உள்ள தனியார் பள்ளி வேன் 35 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சோமந்துரை சித்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நெடுஞ்சாலையில் உடுமலை நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வேன், பள்ளி வாகனம் மீது மோதியது. இதில், பள்ளி வாகனத்தில் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த 5 வயது மாணவனின் வலது கை துண்டானது. மேலும் 8ம் வகுப்பு பயிலும் மாணவன் படுகாயம் அடைந்தான். பின்னர் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சரக்கு வேனை போலீசார் வளைத்து பிடித்தனர். சரக்கு வேன் ஓட்டுநர் சுரேஷை கைது செய்து விசாரித்ததில், அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. சிறுவனின் துண்டான கையை மீண்டும் ஒட்ட இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்