போல்ட் பந்துவீச்சில் நிலைகுலைந்த இந்திய அணி ! 6 விக்கெட்டுகளை இழந்தது

இந்திய அணி  மற்றும் நியூசிலாந்து  அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை  தேர்வு செய்தது..இதன்படி தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் அடித்தது.பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.7 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்நிலையில்  2வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் அடித்துள்ளது.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.