அசல் ஓட்டுனர் உரிமம் :செப். 5 ஆம் தேதி வரை கட்டாய படுத்தக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

வாகன ஓட்டிகள் அனைவரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தங்களது ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரூ.500 அபராதம், 3 மாத சிறைத் தண்டனை ஆகிய இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 
இதுகுறித்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதி துரைசாமி இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என பரிந்துரை செய்தார். அசல் உரிமம் வைத்திருப்பது மிகவும் இடையூறல்களை உருவாக்கும் எனவும் அசல் உரிமம் வைத்திருக்குமாறு செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கட்டாயப்படுத்த கூடாது எனவும், நீதிபதி உத்தரவிட்டார்

Leave a Comment