500 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட் போனா….? செப்டம்பர் 10 முதல் இந்தியாவில் அறிமுகம்…!

ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட் போன்களை செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஜியோ நிறுவனத்தின் மூலமாக மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தார். இந்நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது டெலிகாம் சேவை வாடிக்கையாளர்களை அடிப்படையாக வைத்து ஜியோ நிறுவனத்துடன் 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து, இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் உருவாக்கி விற்பனை செய்யும் மிக முக்கியமான திட்டத்திற்கு இரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ – கூகுள் கூட்டணி பல கட்ட ஆலோசனை, திட்டமிடல் மூலம் தற்போது உலகில் யாரும் கொடுக்க முடியாத விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து, வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் அன்று நாடு முழுவதும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் மூலமாக இந்தியாவில் இருக்கக்கூடிய 300 மில்லியன் வாடிக்கையாளர்களை ஜியோ தளத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்பதே முகேஷ் அம்பானியின் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன்களில் இந்தியாவிற்கான பிரத்யேகமான ஆண்ட்ராய்டு மென்பொருள் மறுசீரமைப்பு செய்து, சாமானிய மக்கள் அனைவரும் தினசரி பயன்படுத்தும் வகையில் முக்கியமான செய்தி சேவைகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை 500 முதல் 700 ரூபாய் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிக அளவில் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Rebekal