கரூர் அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த 43 பேர் டிஸ்சார்ச்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வைரஸ் நோயானது தற்போது தமிழகத்திலும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குணமாகி வீடு திரும்பி வருகிற நிலையில், கரூர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 48 பேர் குணமடைந்த நிலையில், ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த 48 பேரையும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆட்சியர், காவல்துறையினர் கைதட்டி வழியனுப்பி வைத்துள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 43 பேர் டிஸ்சார்ச் !
By
Dinasuvadu Media @2023