4000 ரூபாய்க்கு 8.1 ஆண்டிராய்டு இயங்குதளத்துடன் களமிறங்கிறது கூல்பேட் போன்கள்!!

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இருக்கும் நிறுவனமான கூல்பேட் நிறுவனம் தற்போது புதிய மூன்று மாடல்களை களமிறங்கியுள்ளது. அந்த மாடல்கள், கூல்பேட் மெகா 5, கூல்பேட் மெகா 5சி, கூல்பேட் மெகா 5எம் என புதிய மாடல்களை ஸ்மார்ட் போன் சந்தையில் களமிறங்கியுள்ளது.
கூல்பேட் மெகா 5 மாடலானது, 6,999/- ருபாய் எனவும், கூல்பேட் மெகா 5சி மாடல் 4,499 ருபாய் எனவும், கூல்பேட் மெகா 5எம் 3,999/- ருபாய் எனவும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூல்பேட் மெகா 5 போன் ஆனது, 5.7 இன்ச் ஹெச்டி திரை வசதியும், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜி வோல்ட், 13 எம்பி கேமரா, 0.3 விஜிஏ சென்சார், 1080 வீடியோ ரெக்கார்டிங் கேப்பலிட்டி. 3000 mAh பேட்டரி திறனும் இருக்கின்றது. இந்த மாடல் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குளத்தில் இயங்கும்.
கூல்பேட் மெகா 5சி மாடலானது, 5.8” HD திரை அமைப்பும், 1 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, டூயல் சிம், 4ஜி வோல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம் பெற்றுள்ளன. 5 MB பிரைமரி சென்சார், 5எம்பி செல்பி கேமரா, 2000 mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 இயங்குதளத்தில் இந்த மாடல் இயங்குகிறது.
கூல்பேட் மெகா 5எம் மாடலானது 5 இன்ச் திரை. 2.5 டி கர்விடு கிளாஸ். 1ஜிபி ரேம் 16 ஜிபி மெமரி. டூயல் சிம், 4 ஜி வோல்ட், 5 எம்பி கேமா, 5எம்பி சென்சார் 2 எம்பி செல்பி கேமரா, 2 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி. மைக்ரோ யுஎஸ்பி 3.5 எம்எஎம் ஹெட்போன் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. 8.1 ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment