சத்து மாத்திரை சாப்பிட்டு சிகிச்சையில் 4 பள்ளி மாணவிகள்.! ஒருவர் உயிரிழப்பு.!

ஊட்டியில் சத்து மாத்திரை சாப்பிட்டு சிகிச்சையில் இருந்த பள்ளி மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ள்ளார்.

ஊட்டியில் உள்ள அரசு உருதுப் பள்ளியில் நான்கு மாணவிகள் போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்டதால் மயக்கமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Readmore: போட்டிபோட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகள்..! 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

Tablets

பாதிக்கப்பட்ட மாணவிகளின் உடல்நிலை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (சிஎம்சிஎச்) கொண்டு வரப்பட்டபோது சாதாரணமாக இருந்துள்ளது. அதன் பின் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குழு ஒரு சிறுமிக்கு கடுமையான கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்து உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது.

nutrient pills

துரதிர்ஷ்டவசமாக செல்லும் வழியிலே மாணவி உயிரிழந்தார். இந்நிலையில் கவனக்குறைவாக பணியாற்றிய சுகாதார ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு நாளைக்கு ஒன்று என்ற விதத்தில் வழங்கப்படவேண்டிய மாத்திரைகளை மொத்தமாக வழங்கியதற்காக அரசு உருதுப் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment