சட்ட பேரவைக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் எப்படி கூறுகிறார்..? – சபாநாயகர் அப்பாவு

சட்டமன்றத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலான வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்திருக்கலாம் என சபாநாயகர் அப்பாவு பேட்டி. 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழக ஆளுநர், 4 மாதங்கள் கடந்தும், இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் மீண்டும் கூடுதல் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

சபாநாயகர் அப்பாவு பேட்டி 

சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு சட்டம் கொண்டுவர, சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என, எந்த சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் கூறினார் என தெரியவில்லை.

சட்டமன்றத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலான வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்திருக்கலாம். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு சட்டம் கொண்டுவர சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்துக்கும் சட்ட மசோதாவுக்கும் வித்தியாசம் இல்லை. ஆன்லைன் சூதாட்டம் மசோதாவிற்கு ஆளுநர் தாமதம் ஏற்படுத்தியதற்கான காரணம் தெரியவில்லை.

ஆளுநருக்கு எங்கிருந்து யாரால் அழுத்தம் வந்தது?

மசோதாவை திருப்பி அனுப்பக்கூடிய அளவுக்கு ஆளுநருக்கு எங்கிருந்து யாரால் அழுத்தம் வந்தது என்றும் தெரியவில்லை. ஆளுநருக்கு வந்த அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்திருப்பாரோ என்று நினைக்கிறேன். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அரசின் சட்டத்திற்கு ஆளுநர் எதிராக இருந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி Skill game அல்ல, Kill Game என நாடாளுமன்றத்தில் வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார்; சட்டம் மாநில பட்டியலில் இருக்கிறது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இவையெல்லாம் , ஆளுநர் கவனத்திற்கு போனதா? என தெரியவில்லை; எடுத்தோம், கவிழ்த்தோம் என சட்டத்தைக் கொண்டு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Comment