புயலால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு! சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் – அமைச்சர் அறிவிப்பு

மாண்டஸ் புயலால், தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி.

மாண்டஸ் புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு உரிய நிவரப்பினம் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.  கட்டுமரம் முழுமையாக சேதமானால் ரூ.32 ஆயிரமும், பகுதி சேதமானால் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 2 முதல் 3 நாட்களில் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் கூறுகையில், மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும் மீட்பு குழுவினர் தயார் நிலையிலேயே உள்ளனர். புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்று மதியதிற்குள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்துவிடும். புயலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சில நாட்களில் உரிய நிவாரணம் வழங்கப்படும். பேருந்து போக்குவரத்து வழக்கம்போல் செயல்படுகிறது. இன்று மாலைக்குள் இயல்பு இலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment