அணு ஒப்பந்தத்தத்தை அமெரிக்கா ரத்து செய்தாலும் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய மற்ற 3 நாடுகள்…!

2015ம் ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட அணு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தப்போவதாக வெள்ளிக்கிழமை டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் “எங்கள் பொதுவான தேசிய பாதுகாப்பு நலன் சார்ந்தது” என்று பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் பதிலளித்துள்ளன.
“நடைமுறையில் இருக்கும் ஒரு ஒப்பந்தத்தை “எந்த தனியொரு நாட்டாலும் நிறுத்திவிட முடியாது” என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
“அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது” என்று ஈரான் அதிபர் ஹசான் ரூஹானி தெரிவித்துள்ளார்.
“ஒரு அதிபர் பலதரப்பு ஒப்பந்தம் ஒன்றை செல்லுபடியாகாது என்று தாமாக அறிவிக்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான ஓர் இருதரப்பு ஒப்பந்தமாக இது இல்லை என்பது அவருக்கு தெரியவில்லை என்றே தோன்றுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஜெர்மனி, சீனா என சர்வதேச அளவில் அதிக சக்தி வாய்ந்த 6 நாடுகளுக்கும் இரானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, இரான் தன்னுடைய அணு ஆயுத ஆய்வைக் கைவிடுவதற்குப் பதிலீடாக இரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டன.
வெள்ளிக்கிழமை ஆற்றிய ஆவேசமான உரையில், இரான் பயங்கரவாத்த்திற்கு துணைபோகிறது என்றும் அங்கு நடப்பது (மத)வெறி ஆட்சி என்றும் குற்றஞ்சாட்டியுள்ள டிரம்ப், புதிய தடைகளை முன்மொழிந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்தத்தை அந்த நாடு ஏற்கெனவே மீறிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment